MARC காட்சி

Back
பூண்டி புதுமை மாதா திருத்தலம்
245 : _ _ |a பூண்டி புதுமை மாதா திருத்தலம் -
246 : _ _ |a ராணி இம்மாகுலேட் மேரி தேவாலயம், பூண்டி மாதா கோவில்
520 : _ _ |a தமிழ்நாட்டில் உள்ள 4 பசிலிக்காக்களுள் பூண்டியும் ஒன்றாய் விளங்குகிறது. (1714-1718) 18- ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த இத்தாலிய நாட்டைச் சேர்ந்த கிறித்துவ போதகரான அருட்தந்தை வீரமாமுனிவரின் (Fr. Constentine Joseph Beschi J) முயற்சியால் கட்டப்பட்டது. இப்பொழுது இருக்கும் கோவிலின் வடிவம் அருட்தந்தை லூர்து சேவியரால் புனரமைக்கப்பட்டது. இத்திருத்தலம் திருத்தந்தை இரண்டாம் ஜான்பால் அவர்களின் உத்தரவு பெற்றதன் பின் 1999 ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 3-ஆம் தேதி பசிலிக்காவாக அறிவிக்கப்பட்டது.
653 : _ _ |a கிறித்துவம், கிறிஸ்துவம், தேவாலயம், சர்ச், தமிழ்நாடு, கிறித்துவ திருத்தலம், பூண்டி மாதா கோயில், பூண்டி மாதா, பூண்டி மாதா பசிலிக்கா, கத்தோலிக்க தேவாலயம், திருக்காட்டுப்பள்ளி, பூண்டி, மாதா கோவில், வீரமாமுனிவர், லூர்து சேவியர், ராணி இம்மாகுலேட் மேரி தேவாலயம்
700 : _ _ |a திரு.வேலுதரன்
710 : _ _ |a தமிழ் இணையக் கல்விக்கழகம்
905 : _ _ |a 1714-1720
909 : _ _ |a 8
910 : _ _ |a 300 ஆண்டுகள் பழமையானது. தமிழ்நாட்டில் உள்ள 4 பசிலிக்காக்களுள் பூண்டி மாதா பேராலயம் ஒன்றாகும்.
914 : _ _ |a 10.864304432682
915 : _ _ |a 78.941262981107
918 : _ _ |a மேரி மாதா
922 : _ _ |a கிறிஸ்துமஸ் மரம்
924 : _ _ |a வேதாகமம்
925 : _ _ |a ஞாயிறு மற்றும் முக்கிய நாட்கள் : காலை : 6.00 மணி, 8.30 மணி ; முற்பகல் : 11.15 மணி ; மாலை:5.15 மணி மற்ற நாட்கள் : காலை :6.00 மணி; முற்பகல் :11.15 மணி; மாலை:5.15 மணி
926 : _ _ |a கிறிஸ்துமஸ், ஈஸ்டர், ஆங்கிலப்புத்தாண்டு
928 : _ _ |a தேவாலயத்தின் சாளரத்தில் அமைக்கப்பட்டுள்ள கண்ணாடிகளில் கொடிக்கருக்கு வேலைப்பாடுகள் வரையப்பட்டுள்ளன.
929 : _ _ |a பிரான்ஸ் நாட்டில் உள்ள லூர்து நகரில் 1858ஆம் ஆண்டில் பிப்ரவரி 11 ஆம் நாள் அன்னை மரியா பெர்னதெத் என்ற சிறுமிக்கு காட்சி தந்து 'நாமே அமல உற்பவம்" என்று சொல்லி மக்களை செபிக்கும்படி கேட்டுக்கொண்டார். லூர்துநகரில் மாதா திருக்காட்சி தந்தார். இதன் நினைவாக அதே ஆண்டில் அதே தோற்றத்தோடு வடிவமைக்கப்பெற்ற மூன்று மாதா சிற்பங்கள் இந்தியாவிற்கு கொண்டு வரப்பட்டது. இவற்றில் ஒன்றுதான் பூண்டிமாதா ஆலயத்தில் வைக்கப்பட்டது. 144 ஆண்டு பழமை வாய்ந்த அந்த மாதா சிற்பம் பூண்டி புதுமை மாதா என்று மக்களால் போற்றப்படுகிறது.
930 : _ _ |a பிரான்ஸ் நாட்டில் உள்ள லூர்து நகரில் 1858ஆம் ஆண்டில் பிப்ரவரி 11 ஆம் நாள் அன்னை மரியா பெர்னதெத் என்ற சிறுமிக்கு காட்சி தந்து 'நாமே அமல உற்பவம்" என்று சொல்லி மக்களை செபிக்கும்படி கேட்டுக்கொண்டார். லூர்துநகரில் மாதா திருக்காட்சி தந்தார். இதன் நினைவாக அதே ஆண்டில் அதே தோற்றத்தோடு வடிவமைக்கப்பெற்ற மூன்று மாதா சிற்பங்கள் இந்தியாவிற்கு கொண்டு வரப்பட்டது. இவற்றில் ஒன்றுதான் பூண்டிமாதா ஆலயத்தில் வைக்கப்பட்டது. 144 ஆண்டு பழமை வாய்ந்த அந்த மாதா சிற்பம் பூண்டி புதுமை மாதா என்று மக்களால் போற்றப்படுகிறது. கும்பகோணம் மறைமாவட்டத்தில் உள்ள 87 பங்குகளில் ஒன்று தான் இந்த பூண்டி ஆகும். 1710 ல் இத்தாலி நாட்டிலிருந்து இந்தியாவிற்கு இயேசுவின் நற்செய்தியை போதிக்க வந்தவர் தான் கான்ஸ்டாண்டியுஸ் ஜோசப் பெஸ்கி. தமிழகத்தில் 37 ஆண்டுகள் வாழ்ந்து கிறிஸ்தவ குருவாக சமயத்தொண்டு ஆற்றினார். இவரை வீரமாமுனிவர் என்று அழைக்கிறோம். இவர் 1714-1720 இந்த ஆண்டுகளில் பூண்டியில் தங்கியிருந்தபோது மரியன்னைக்கு ஆலயம் ஒன்று கட்டினார். அங்கு எழுந்தருளியுள்ள மாதாவை அமலோற்பவ மாதா எனப் போற்றி வணங்கினார். 1945 ல் பூண்டி திருத்தலமாகவே விளங்கியது.இத்திருத்தலம் திருத்தந்தை இரண்டாம் ஜான்பால் அவர்களின் உத்தரவு பெற்றதன் பின் 1999 ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 3-ஆம் தேதி பசிலிக்காவாக அறிவிக்கப்பட்டது. தமிழ்நாட்டில் உள்ள 4 பசிலிக்காக்களுள் பூண்டியும் ஒன்றாய் பாரெங்கும் பக்தி மணம் பரப்பி வருகிறது. ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன் இயேசுநாதர் பாடுபட்ட திருச்சிலுவையின் சிறுபகுதி கர்தினால் லூர்துசாமி அவர்களின் உதவியால் அருட்தந்தை இராயப்பர் அடிகளார் பூண்டிக்கு கொண்டு வந்தார். அந்த திருச்சிலுவை பக்தர்களின் வணக்கத்திற்காக மாதா பீடத்தில் வைக்கப்பட்டுள்ளது.
933 : _ _ |a தென்னிந்திய கத்தோலிக்க திருச்சபை
934 : _ _ |a மேலைத்திருக்காட்டுப்பள்ளி ஆரண்யேசுவரர் கோயில், கீழையூர் கடைமுடிநாதர் கோயில்
935 : _ _ |a  பூண்டி மாதா கோவில்  தஞ்சாவூரில் இருந்து சுமார் 35 கிலோ மீட்டர் வடமேற்கில் திருக்காட்டுப்பள்ளிக்கு அருகே பூண்டி என்னும் ஊரில்  கொள்ளிடம் ஆற்றிற்கும், காவிரி ஆற்றிற்கும் நடுவில் அமைந்துள்ளது. இப்பேராலயத்தை திருச்சி - செங்கிப்பட்டி- திருக்காட்டுப்பள்ளி மார்க்கமாகவும், திருச்சி - இலால்குடி - செங்கரையூர் மார்க்கமாகவும், தஞ்சை - பூதலூர் மார்க்கமாகவும் வந்தடையலாம்.
937 : _ _ |a திருக்காட்டுப்பள்ளி
938 : _ _ |a பூதலூர், திருச்சி
939 : _ _ |a திருச்சி
940 : _ _ |a பூண்டி மாதா கோயில் விடுதிகள்
995 : _ _ |a TVA_TEM_000364
barcode : TVA_TEM_000364
book category : கிறித்துவம்
cover images TVA_TEM_000364/TVA_TEM_000364_தஞ்சாவூர்_பூண்டி-புதுமை-மாதா_திருத்தலம்-0001.jpg :
Primary File :

TVA_TEM_000364/TVA_TEM_000364_தஞ்சாவூர்_பூண்டி-புதுமை-மாதா_திருத்தலம்-0001.jpg

TVA_TEM_000364/TVA_TEM_000364_தஞ்சாவூர்_பூண்டி-புதுமை-மாதா_திருத்தலம்-0002.jpg

TVA_TEM_000364/TVA_TEM_000364_தஞ்சாவூர்_பூண்டி-புதுமை-மாதா_திருத்தலம்-0003.jpg

TVA_TEM_000364/TVA_TEM_000364_தஞ்சாவூர்_பூண்டி-புதுமை-மாதா_திருத்தலம்-0004.jpg

TVA_TEM_000364/TVA_TEM_000364_தஞ்சாவூர்_பூண்டி-புதுமை-மாதா_திருத்தலம்-0005.jpg

TVA_TEM_000364/TVA_TEM_000364_தஞ்சாவூர்_பூண்டி-புதுமை-மாதா_திருத்தலம்-0006.jpg

TVA_TEM_000364/TVA_TEM_000364_தஞ்சாவூர்_பூண்டி-புதுமை-மாதா_திருத்தலம்-0007.jpg

TVA_TEM_000364/TVA_TEM_000364_தஞ்சாவூர்_பூண்டி-புதுமை-மாதா_திருத்தலம்-0008.jpg

TVA_TEM_000364/TVA_TEM_000364_தஞ்சாவூர்_பூண்டி-புதுமை-மாதா_திருத்தலம்-0009.jpg

TVA_TEM_000364/TVA_TEM_000364_தஞ்சாவூர்_பூண்டி-புதுமை-மாதா_திருத்தலம்-0010.jpg